search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்"

    கன்னியாகுமரியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி போக்குவரத்து பிரிவு சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அன்பழகன். (வயது 55). இவர் நேற்று கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த ஜாண் (39) என்பவர் ஆட்டோவில் கடற்கரை சாலை வழியாக செல்ல முயன்றார். 

    இதனை சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தடுத்து நிறுத்தி அந்த வழியாக செல்ல கூடாது என கூறினார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஜாண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். 

    இதுகுறித்து அன்பழகன் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஆட்டோ டிரைவர் ஜாணை போலீசார் கைது செய்தனர். 
    சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 30 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு பொட்டல் பகுதியில் தனியார் சார்பில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இங்கு இரவு 11 மணிக்கு மேல் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். 

    இந்நிலையில் நேற்று இரவு கண்காட்சி பகுதியில் டவுண் சப்-இன்ஸ்பெக்டர் சக்திநடராஜன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 11 மணியை கடந்தும் ராட்டினத்தை இயக்கி கொண்டிருந்தனர். இது குறித்து சக்தி நடராஜன் தட்டிக்கேட்டார். இதில் சப்-இன்ஸ்பெக்டருக்கும், ராட்டினத்தில் இருந்த 30 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்தவர்கள் சக்திநடராஜனிடம் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். 

    இது குறித்து சக்தி நடராஜன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 30 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    தக்கலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணல் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த டிரைவரை கைது செய்தனர்.
    தக்கலை:

    தக்கலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சித்திரங்கோட்டில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு டாரஸ் லாரி வேகமாக வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தினார்கள். அந்த லாரியை செண்பகராமன் புதூரை சேர்ந்த டிரைவர் வெங்கடேஷ் ஓட்டிவந்தார்.

    மேலும் அந்த லாரியில் போலீசார் சோதனை செய்த போது அதில் ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது. ஆனால் ஆற்று மணலை கொண்டு செல்வதற்கான முறையான ஆவணங்கள் எதுவும் லாரி டிரைவர் வெங்கடேசிடம் இல்லை.

    இதைதொடர்ந்து மணல் கடத்திய லாரியையும், அதன் டிரைவர் வெங்கடேசையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    அப்போது டிரைவர் வெங்கடேஷ் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் ரமேசுக்கு அவர் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி தக்கலை போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் புகார் செய்தார். இதைதொடர்ந்து லாரி டிரைவர் வெங்கடேசை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
    போக்குவரத்து நெரிசலை சீர்செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த கார் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    இரணியல்:

    இரணியல் அருகே கண்டன்விளை பாலவிளை பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 54). இவர் குளச்சல் போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று மாலை நாகர்கோவிலை அடுத்த களியங்காடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை சீர்செய்யும் பணியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினம் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கார் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டு இருந்தது. இதனை ஒதுக்கி நிறுத்துமாறு கூறினார்.

    இதில் ஆத்திரமடைந்த கார் டிரைவர் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த கார் டிரைவர் போலீசாரை தாக்கினார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். காயம் அடைந்த ரத்தினத்தை குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து இரணியல் போலீசில் ரத்தினம் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் ஆகியோர் வழக்குபதிவு செய்து போலீசாரை தாக்கிவிட்டு சென்ற கார் டிரைவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
    ×